Dataset Viewer
Auto-converted to Parquet Duplicate
text
stringlengths
7
7.53k
id
int64
0
946
மூவேந்தர் (Three Crowned Kings) என்பது பண்டைய தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களைக் குறிக்கும். இவர்களில் சேரர்கள் கேரள, தமிழகத்தின் மேற்குப் பகுதிகளை ஆட்சி செய்தனர். சோழர்கள் திருச்சி, தஞ்சை பகுதிகளையும் பாண்டியர்கள் மதுரைப் பகுதிகளையும் ஆட்சி செய்தனர்.
0
மூவேந்தர் பெயர்க் குறிப்பு மூவேந்தரை "முடியுடை மூவேந்தர்" எனச் சிறப்பித்துக் கூறுதல் மரபு. முதற்காலத்தில் முடி அணியும் உரிமை இவர்களுக்கு மட்டுமே இருந்ததாலேயே இவர்கள் வேந்தர் எனப்பட்டனர். வேந்தன் என்பது வேய்ந்தோன் என்பதன் மரூஉ ஆகும்.
1
சேரர் பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரிச் சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரர்களின் ஆட்சி பொ.ஊ.மு. 300-200 முதல் பொ.ஊ. 15ஆம் நூற்றாண்டு வரை நிலைத்தது. சேரர்களின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு...
2
சோழர் சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது. சோழர்கள், சூரிய வம்சத்தைச் சார்ந்தவர்கள் எனவும், ஆத்தி பூ மாலை அணிந்தவர்கள் எனவும், புலி கொடியினை உடையவர்கள் எனவும் குறிப்பிடப்படுகிறது. பொ.ஊ. பத்தாம், பதினொன்றாம், பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில், சோழர் வலிமை மிகவும் உயர் நிலையில் இருந்த...
3
பாண்டியர் பாண்டியர்கள் குறித்து அசோகரது கல்வெட்டுக்களில் குறிப்புகள் உள்ளன. பாண்டியர்கள்திருநெல்வேலி மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர். தமிழ்ச் சங்கங்களை நிறுவி ஆதரவு அளித்தவர்கள் என்று தமிழ் இலக்கியங்கள் பாண்டிய அரசர்களை போற்றுகின்றன. மாங்குளத்தில் கண்டறியப்பட்ட தமிழ்-பிராமி கல்வெட்டுகள் ப...
4
ஆட்சி நிலப் பரப்பு தமிழ் அரசர்கள் வேற்றுமொழி பேசும் நிலப் பகுதியையும் ஆண்டுவந்தனர். நாட்டிலிருந்து பொருள் ஈட்டச் சென்றவர்கள் அவர்களின் மலைநாட்டையும் கடந்து சென்றனர். அங்கு வழிப்போக்கர்களைக் கொன்று கொள்ளை அடிக்கும் மக்களும் வாழ்ந்துவந்தனர்.
5
சங்க காலக் குறுநில மன்னர்கள் நன்னன் என்னும் பெயர் கொண்ட அரசர்கள் பலர் பல்வேறு இடங்களில் இருந்துகொண்டு அரசாண்ட செய்திகளைச் சங்கப் பாடல்கள் நமக்குக் காட்டுகின்றன. அவர்களின் காவல்மரம் வெவ்வேறாக இருப்பதால் அவர்களை ஒருவராகக் கொள்ள முடியவில்லை. இப்படிப் பிற குறுநில மன்னர்களின் வரலாற்றிலும் சிற்சில குழப்பங்கள் உள்ளன. இந்தக் க...
6
சோழர் (Chola dynasty) என்பவர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இருவர் சேரர்களும், பாண்டியர்களும் ஆவர். நெல் இயற்கையாகவோ, மிகுதியாகவோ விளைந்த நாடு சோழ நாடெனப்பட்டது. 'சோழ நாடு சோறுடைத்து' என்பது பழமொழி. எனவே சோறுடைத்த நாடு 'சோறநாடு' ஆகிப் பின், சோழ நாடாகியது என்பர். நெல்லின் மற்றொரு பெயரான சொல்...
7
தோற்றமும் வரலாறும் சோழர்களின் தோற்றம் பற்றிய தெளிவான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. பொதுவாகத் தமிழ் நாட்டு அரச குடிகள் பற்றிய தகவல்களைப் பெற உதவும் மூலங்களான, சங்க இலக்கியங்கள் கிறிஸ்து சகாப்தத்தின் தொடக்க காலத்தைச் சேர்ந்த சோழ மன்னர்கள் பற்றி ஓரளவு தகவல்களைப் பெற உதவினாலும், அவர்கள் வாழ்ந்த காலப் பகுதிகளை ஐயத்துக்கு...
8
முற்காலச் சோழர்கள் இன்றைய தஞ்சை, [[திருச்சி][ உள்ளிட்ட காவிரி பாயும் மாவட்டங்களை தன்னகத்தே கொண்டது சோழ நாடு. இந்நாடு எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்க நூல்களிலும் சங்க காலத்திற்குப் பின் தோன்றிய பல இலக்கியங்களிலும் போற்றப்படுகிறது. சங்க இலக்கியங்களில் காணப்படும் காலத்தால் முந்திய சோழ மன்னன், வேல் பல் தடக்கைப் பெருவி...
9
முதலாம் கரிகாலன் கரிகால சோழன் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவான். கரிகாலன் முற்காலச் சோழர்களில் மிகப் புகழ் பெற்றவன் இவனே. இவன் இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான். கரிகால சோழனுக்கு, திருமாவளவன் மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு. முதலாம் கரிகாலன் தாய் வயிற்றில் இருந்தபோதே அவன் தந்தையான இளஞ்ச...
10
பிற சோழ மன்னர்கள் இவன் காலத்துக்குப் பின் ஆண்ட சோழ மன்னர்களில் இராசசூய யாகம் வேட்ட பெருநற்கிள்ளி, போர்வைக் கோப்பெருநற்கிள்ளி, பாண்டிய நாட்டுப் புலவர் பிசிராந்தையாரோடு நட்பு பூண்ட கோப்பெருஞ்சோழன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், இலவந்திகைப் பள்ளி துஞ்சிய நலங்கிள்ளி, குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன் போன்ற பலர...
11
இடைக்காலச் சோழர்கள் களப்பிரர் வருகை பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின் களப்பிரர் தமிழ்நாட்டுக்கு வடக்கிலிருந்த கன்னட நாட்டிலிருந்து வந்து சோழநாட்டின் பல பகுதிகளைப் படிப்படியாகக் கைப்பற்றிக் கொண்டனர். சோழர்கள் பல இடங்களுக்கும் சிதறினர். பொ.ஊ. நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில், அச்சுத களப்பாளன் என்னும் களப்பிர மன்னன்...
12
பழையாறை சோழர்கள் தம் சுதந்திரத்தை மீண்டும் நிலைநாட்ட இயலாத சோழ மன்னர்கள், காவிரிக்கரைப்பகுதிகளில் குறிப்பாக உறையூர், பழையாறை நகரங்களிலிருந்து சோழ நாட்டின் சிலபகுதிகளை மட்டும் ஏறத்தாழ இருநூறாண்டுகள் புகழ் மங்கிய நிலையில் ஆண்டு வந்தனர். இக்காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்களும் இலக்கியமும் இச்சோழ மன்னர்களைப்பற்றி மேலெழுந்த வ...
13
இசை வெங்கிள்ளி பொ.ஊ. 300–330 கைவண்கிள்ளி பொ.ஊ. 330–350 பொலம்பூண்கிள்ளி பொ.ஊ. 350–375 கடுமான்கிள்ளி பொ.ஊ. 375–400 இரண்டாம் கோச்சோழன் செங்கணான் பொ.ஊ. 400–440 நல்லடி சோழன் பொ.ஊ. 440–475 பெயர் தெரியவில்லை பொ.ஊ. 476–499 மூன்றாம் கோச்சோழன் செங்கணான் பொ.ஊ. 499–524 புகழ்சோழன் பொ.ஊ. 524–530 மூன்றாம் கரிகாலன் பொ.ஊ. 530–550
14
அரசநாட்டுச் சோழர்கள் களப்பிரர் மற்றும் முத்தரையர் ஆதிக்கத்தின் காரணமாகச் சோழர்கள் தமிழகத்தில் செல்வாக்கிழந்த நிலையில், மூன்றாம் கரிகாலன் களப்பிரர், முத்தரையர் ஆகியோரை விரட்டியதோடு, பல்லவ மன்னனான திரிலோசன பல்லவனை வெற்றி கொண்டு தொண்டை நாட்டை கைப்பற்றினான். ஆனால், கரிகாலனின் மறைவிற்குப் பின் பொ.ஊ. 550 இல் பல்லவ மன்னன் சிம...
15
நந்திவரும சோழன் பொ.ஊ. 550–575 தனஞ்செய சோழன் பொ.ஊ. 575–609 மகேந்திரவருமச் சோழன் பொ.ஊ. 609–630 புண்ணியகுமார சோழன் பொ.ஊ. 630–655 விக்கிரமாதித்த சோழன் பொ.ஊ. 650–680 சக்திகுமார சோழன் பொ.ஊ. 680–705 விக்கிரமாதித்த சோழன் II பொ.ஊ. 705–730 சத்தியாதித்தச் சோழன் பொ.ஊ. 730–755 விசயாதித்த சோழன் பொ.ஊ. 755–790 சிரீகாந்த சிரீமனோகர சோழன...
16
பிற்காலச் சோழர்கள் பிற்காலச் சோழர்களின் வரலாற்றை அறிய வெங்கையா, உல்ச், கிருட்டிணசாத்திரி ஆகியோர் தொகுத்த கல்வெட்டுகளும் மன்னர்கள் வெளியிட்ட செப்பேடுகளும் வழி செய்கின்றன. அன்பில் பட்டயங்கள், திருவாலங்காட்டுச் செப்பேடுகள், கரந்தைச் செப்பேடுகள், ஆனைமங்கலம் செப்பேடுகள், லெடன் செப்பேடுகள் ஆகியவை அவற்றுள் சில. இவை தவிர இலக்க...
17
விசயாலய சோழன் (பொ.ஊ. 850-871) பொ.ஊ. ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் பல்லவர்களுக்கும், தென்பகுதிகளில் வலுவுடன் இருந்த பாண்டியர்களுக்கும் இடையில் போட்டி நிலவியது. இக்காலத்தில் சோழச் சிற்றரசர்கள் பல்லவர்களுக்கு ஆதரவாக இருந்ததாகத் தெரிகிறது. பழையாறையில் தங்கி குறுநில மன்னனாக இருந்த சோழ மன்னன் விசயாலயன் என்பவன், பொ.ஊ. ...
18
முதலாம் ஆதித்த சோழன் (பொ.ஊ. 871-907) விசயாலயனைத் தொடர்ந்து பதவிக்கு வந்தவன் ஆதித்தன். 'முதலாம் ஆதித்தன்' என்று அழைக்கப்படும் அரசியல் ஆற்றலும் போர்த்திறமும் மிக்க இவன் சோழநாட்டு எல்லைகளை விரிவாக்கினான். பொ.ஊ. 880-ல் பல்லவர்களிடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டியின் காரணமாக நிருபத்துங்க பல்லவனுக்கும் பல்லவன் அபராசிதனுக்கும் இ...
19
முதலாம் பராந்தக சோழன் (பொ.ஊ. 907-955) பொ.ஊ. 907 இல் முதலாம் ஆதித்த சோழனை அடுத்து அரசனானவன் பராந்தக சோழன். இக்காலத்தில் சோழப் பேரரசு வடக்கே காளத்தி முதல் தெற்கே காவிரி வரை பரவியிருந்தது. இவனும் போர் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டான். பாண்டியர்களுடன் போரிட்டு மதுரையைக் கைப்பற்றிக் கன்னியாகுமரி வரை பரந்த பாண்டிநாட்டை சோ...
20
கண்டராதித்த சோழன் (பொ.ஊ. 955-962) பிற்காலத்தில் இராட்டிரகூடருடன் ஏற்பட்ட போரில் அவனது மகன் இராசாதித்தர் இறந்ததைத் தொடர்ந்து சோழநாட்டின் விரிவு வேகம் தணியத் தொடங்கியது. இராட்டிரகூடர்கள் சோழநாட்டின் சில பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டனர். பராந்தக சோழனின் இயலாமையாலோ வேறு காரணங்களினாலோ அவன் உயிருடன் இருந்தபோதே அவனது மகன் கண்ட...
21
அரிஞ்சய சோழன் (பொ.ஊ. 962-963) கண்டராதித்தனை அடுத்து அவன் தம்பி அரிஞ்சயன் சோழ அரசனானான். முதலாம் பராந்தக சோழனின் மூத்த மகனான இராசாதித்தன் திருக்கோவிலூரில் இராட்டிரகூட மன்னனை எதிர்க்கப் படையுடன் தங்கியிருந்த போது அவனுக்குத் துணைபுரிய இவனும் தங்கியிருந்த சிறப்புடையவன். இராட்டிர கூடன் கைப்பற்றிய தொண்டை நாட்டைத் தான் மீட்...
22
சுந்தர சோழன் (பொ.ஊ. 957-973) சோழ நாட்டின் இழந்த பகுதிகளை மீட்பதில் வெற்றி பெற்றவன் 957 இல் பட்டத்துக்கு வந்த சுந்தர சோழன் ஆவான். இவன் இராட்டிரகூடர்களைத் தோற்கடித்தது தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றியதுடன், பாண்டியர்களையும் வெற்றி கொண்டான். எனினும், பட்டத்து இளவரசனான, சுந்தர சோழனின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் பகைவர் சூழ்ச்ச...
23
உத்தம சோழன் (பொ.ஊ. 970-985) பொ.ஊ. 973 இல் சுந்தரசோழன் இறந்த பின்பு, அவன் மகன் இராசராசன் மன்னனாகவில்லை. கண்டராதித்தனின் மகனும் இராசஇராசனின் சிறிய தந்தையுமாகிய உத்தம சோழன் அரசுரிமை பெற்றான். இவனுக்கு முன்னதாகவே கிடைத்திருக்கவேண்டிய அரசுரிமை நீண்ட காலம் மறுக்கப்பட்டிருந்ததாகவும் வேறு சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இவன் கா...
24
இராசராச சோழன் (பொ.ஊ. 985-1014) பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், 985 இல் உத்தம சோழன் இறந்தபின்னர், சுந்தர சோழனின் இரண்டாவது மகனான இராசராச சோழன் மன்னனானான். இவனுக்கு அருள்மொழிவர்மன், ரிசிவர்மன் என்று பெயர்கள் வழங்கப் பட்டதாக அழகர் கோவில் கல்வெட்டுகளில் இருந்து அறியப்படுகிறது. இவன் காலத்தில் சோழநாட்டின் வலிமை பெருகியது...
25
காந்தளூர்ச் சாலை இவற்றுக்காக இராசராசன் நடத்திய போர்கள் பல. சேரர், பாண்டியர், சிங்களவர், ஒன்று கூடி காந்தளூர்ச் சாலை என்ற இடத்தில் சோழரை எதிர்த்தனர். இப்போரில் சேர மன்னன் பாசுகர ரவிவர்மனைத் தோற்கடித்தான். சேர மன்னனுடைய கப்பற்படையை அழித்து உதகை, விழிஞம் ஆகிய பகுதிகளையும் வென்றான். இப்போரில், சேரருக்கு உதவுவதற்காகச் சென்ற...
26
கங்கபாடி, நுளம்பாடி சோழ நாட்டுக்கு வடக்கிலும், கங்கர்களைத் தோற்கடித்து கங்கபாடியைக் (மைசூரின் தென்பகுதியும் சேலம் மாவட்டத்தில் வட பகுதியும் அடங்கிய நாடு) கைப்பற்றினான். தலைக்காட்டைத் தலைநகராகக் கொண்டு கங்கர்கள் இந்நாட்டை ஆண்டனர். மைசூர் நாட்டின் கீழ்ப்பகுதியும் பல்லாரி மாவட்டமும் கொண்ட நுளம்பாடியைப் பல்லவர்களின் வம்சத...
27
ஈழத்துப் போர் இராசராசன் வலிமை மிக்கக் கடற்படையைக் கொண்டு இலங்கையை வென்றான் எனத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் புகழ்கின்றன. அப்போது ஐந்தாம் மகிந்தன் இலங்கை வேந்தனாக இருந்தான். சோழ நாட்டு மண்டலங்களில் ஒன்றாக மாறிய ஈழம் 'மும்முடிச் சோழ மண்டலம்' எனப் பெயர் பெற்றது. இலங்கையின் தலைநகராகத் திகழ்ந்த அநுராதபுரம் போரில் அழிந்தது...
28
முதலாம் இராசேந்திர சோழன் (பொ.ஊ. 1012-1044) இராசராசன் காலத்தில் இளவரசனாகப் பட்டம் சூட்டப்பெற்றவன் இராசேந்திர சோழன். இராசராசனின் மறைவுக்குப்பின், 1012-இல் அவனது மகனான இராசேந்திரன் சோழநாட்டின் மன்னனானான். ஏற்கனவே தந்தையோடு, போர் நடவடிக்கைகளிலும், நிர்வாகத்திலும் ஈடுபட்டு அனுபவமும் திறனும் பெற்றிருந்த இராசேந்திரன், ஆளுமை க...
29
வடக்கு எல்லையில், சாளுக்கியர்கள், கலிங்கர்களுடனும், ஒட்ட விசயர்களுடனும் சேர்ந்துகொண்டு சோழரை எதித்தனர். இதனால் சோழர் படைகள் வடநாடு நோக்கிச் சென்றன. சாளுக்கியர், கலிங்கர், ஒட்ட விசயர் ஆகியவர்களையும், பல சிற்றரசர்களையும் வென்று, வங்காள நாட்டையும் சோழர்படை தோற்கடித்தது. சோழர் கைப்பற்றியிருந்த இடங்களில் அடிக்கடி கிளர்ச்சி...
30
பின்வந்த சோழ மன்னர்கள் முதலாம் இராசாதிராசன் இராசேந்திர சோழனுக்குப் பின் 1044 ஆம் ஆண்டில் அவனது மகன் முதலாம் இராசாதிராசன் அரசனானான். இவன் காலத்தில் சோழப் பேரரசின் தென் பகுதிகளான ஈழம், பாண்டிநாடு, சேரநாடு ஆகிய இடங்களில் கிளர்ச்சிகள் தீவிரம் அடையத் தொடங்கின எனினும், அவற்றை அவன் அடக்கினான். சாளுக்கியர்களில் தொல்லைகளை அடக்...
31
இரண்டாம் இராசேந்திரன் இவனைத் தொடர்ந்து அவன் தம்பி 'இராசேந்திரன்' என்னும் அரியணைப் பெயருடன் முடி சூட்டிக்கொண்டான். இவன் இரண்டாம் இராசேந்திரன் எனப்படுகின்றான். கொப்பத்துப் போரில் தன் அண்ணன் மாண்டதும் படை நடத்திப் பகைவர்களை வென்றான். இவனது மகள் மதுராந்தகி பிற்காலத்தே குலோத்துங்கன் என்றழைக்கப்பட்ட இரசேந்திரனுக்கு மணம் முடி...
32
பிற மன்னர்கள் இவனுக்குப் பின்னர் இவன் தம்பி வீரராசேந்திரனும், பின்னர் அவன் மகனான அதிராசேந்திரனும் வரிசையாகப் பதவிக்கு வந்தனர். அதிராசேந்திரன் அரசனான சிலமாதங்களிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதாகச் சொல்லப்படுகின்றது. சந்ததி இல்லாமலேயே அதிராசேந்திரன் இறந்து போனதால், தந்தை வழிசாளுக்கிய - தாய்வழியில் சோழர் மரபில் வந்த இள...
33
சாளுக்கிய சோழர்கள் முதலாம் குலோத்துங்கன் பொ.ஊ. 1070-1120 இராசராசசோழனின் தமக்கையான குந்தவையின் மகனுக்கும் முதலாம் இராசேந்திரனின் மகள் அம்மங்கா தேவிக்கும் பிறந்தவன் குலோத்துங்கன். மேலைச் சாளுக்கிய ஆதிக்க விரிவை எதிர்த்து வீரராசேந்திரன் போர் புரிந்த போதும் கடாரத்துக்குச் சோழப்படை சென்ற போதும் குலோத்துங்கன் அதில் பங்கு கொண...
34
வெளிநாட்டுத் தொடர்புகள் முதலாம் இராசராசன் மற்றும் முதலாம் இராசேந்திரன் காலங்களிலேயே சீன நாட்டுடன் சோழ நாட்டிற்குத் தொடர்பு இருந்து வந்தது. குலோத்துங்கனும் தன் ஆட்சிக் காலத்தில் வாணிகத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள 72 பேர்களடங்கிய ஒரு தூதுக் குழுவைச் சீனத்திற்கு அனுப்பிவைத்தான் மேலும் கடாரம், சுமத்திரா போன்ற தீவுகளுடனும் ...
35
ஆட்சிப் பணிகள் குலோத்துங்க சோழனின் ஆட்சியின் போது வரியை நீக்கினான். எனவே சுங்கம் தவிர்த்த சோழன் என அழைக்கப்பட்டான். இராசராசனின் ஆட்சிக்குப்பின் இவனது ஆட்சிக் காலத்தில் சோழ நாடு முழுவதையும் அளக்கும் பணி தொடங்கி இரு ஆண்டுகளில் முடிவுற்றது. நிலமளந்த செயல் இவனது ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த மற்றொரு சிறப்பான செயலாகும். இவன் ச...
36
சோழப் பேரரசின் வீழ்ச்சி முதலாம் குலோத்துங்கனுக்குப் பின்னர் அவனது மகனான விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன், இரண்டாம் இராசாதிராசன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோர் வரிசையாகச் சோழ நாட்டை ஆண்டனர். இக்காலத்தில் சோழர் தொடர்ந்து வலிமையிழந்து வந்தனர். நாட்டின் வடக்கில் ஒய்சாளர்களின் செல்வாக்கு உயர்ந்தத...
37
சோழ அரசர்களின் பட்டியல் பிற சோழர்கள் குளக்கோட்ட சோழன் (17 ஆம் நூற்றாண்டு) எல்லாள சோழன் (பொ.ஊ.மு. 205 - பொ.ஊ.மு. 161) வீரசேகர சோழன் (பொ.ஊ. 1511–1561)
38
சோழ நாடு தமிழ் மரபுகளின்படி பண்டைய சோழ நாடு தற்காலத் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களை உள்ளடக்கியிருந்தது. சோழநாடு, கடலை நோக்கிச் சரிந்து செல்கின்ற ஆனால் பொதுவாக, மட்டமான நில அமைப்பைக் கொண்டது. காவிரி ஆறும், அதன் கிளை ஆறுகளுமே சோழ நாட்டின் நிலத் தோற்றத்தின் முக்கி...
39
"கச்சி ஒரு கால் மிதியா ஒரு காலால் தத்து நீர்த் தண்ணுஞ்சை தான் மிதியா பிற்றையும் ஈழம் மிதியா வருமே எம் கோழியர் கோக்கிள்ளிக் களிறு"
40
சோழர் ஆட்சி சோழர் ஆட்சியில் ஆட்சிமுறை, கட்டிடக் கலை, இலக்கியம், இசை, சிற்பம். நாடகம், ஊராட்சி ஆகியவை சிறந்த நிலையில் இருந்தது. நிர்வாக மற்றும் செயலாக்க நடவடிக்கைகளில் அரசனுக்கு உதவுவதற்காக வலுவான அதிகார அமைப்பு இருந்தது. நிர்வாகம், நீதி வழங்கல், வரி விதித்தல், பாதுகாப்புப் போன்றவற்றில் ஆலோசனைகள் கூற அமைச்சர்கள் இருந்...
41
ஆட்சிப் பிரிவுகள் சோழ அரசு ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. சோழ அரசின் சிறிய பிரிவு கிராமம். இது ஊர் எனப்பட்டது.கிராமங்கள் பல கொண்டது நாடு. இது கோட்டம் அல்லது கூற்றம் எனப்படும். நாடுகள் பல கொண்டது வளநாடு. வளநாடுகள் பல கொண்டது ஒரு மண்டலம் ஆகும். ஒவ்வொரு மண்டலமும் ஒன்பது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.
42
படைகள் கடல் கடந்த நாடுகளையும் கைப்பற்றியவர்கள் சோழர்கள். எனவே சோழப்பேரரசில் ஆற்றல் மிக்க தரைப்படை, யானைப்படை, குதிரைப்படைகளுடன், கப்பற்படையும் இருந்தன. படையின் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனிப் பெயர்கள் இருந்தன. முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன் காலத்தில் 'மூன்றுகை மகாசேனை' என்ற ஒரு சிறப்புப் படையும் இருந்தது, இந்த...
43
- பாவாணர்
44
சமூகநிலை சோழரும் சாதியமும் சோழர்கள் சாதிய அடுக்கமைவையும் அமைப்பையும் ஏற்று, அதற்கு கட்டுப்பட்டு ஆட்சிபுரிந்தார்கள். இவர்கள் காலத்துக்கு முன்னரேயே தீட்டுக் கோட்பாடு தமிழ்ச் சமூகத்தில் வழங்கியதானாலும், இதை அமுல்படுத்துவதில் சோழரின் பங்கும் குறிப்பிடத்தக்கது. "முதலாம் இராசராசனுடைய கல்வெட்டொன்று 'தீண்டாச்சேரி' என ஒரு ஊர்...
45
பெண்டிர் சமூக வாழ்வில் முழுப்பங்கும் ஏற்க பெண்களுக்கு எவ்விதத் தடையும் இல்லை. ஆனால் அடக்கமே, பெண்களின் தலைசிறந்த அணிகலனாகக் கருதப்பட்டது. பொதுவாகச் சொத்து வைத்துக் கொள்வதற்கும் அந்தத் சொத்துக்களைத் தாங்கள் விரும்பியபடி அனுபவித்து வரவும் அவர்களுக்கு உரிமை இருந்துவந்தது. அரசர்கள் மீது அரச குடும்பத்துப் பெண்களுக்கு மிகுந்...
46
உடன்கட்டை ஏறுதல் கணவரை இழந்த பெண் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறுவதைப் பற்றிச் சில கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சோழநாட்டில் இத்தகைய நிகழ்ச்சிகள் மிகக் குறைவாகவே நடந்தன. இது பரவலான வழக்கமாக இல்லை. முதலாம் பராந்தகன் ஆட்சிக் காலத்தில், வீரச் சோழ இளங்கோவேள் என்ற கொடும்பாளூர்ச் சிற்றரசனின் மனைவி கங்கா தேவியார் ...
47
ஆடல் வல்லார் சோழர் காலத்தில் ஆடலும் பாடலும் ஓங்கியிருந்தன.ஆடல் மகளிர் பிறரைக் கவரும் வகையில் திகழ்ந்தனர். பரதத்திலும் இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்று, திருக்கோயில்களில் தொண்டு புரிந்தாள். தான் விரும்பியவரை மணம் புரிந்து கொண்டாள். இவ்ர்களுக்குச் சமூகத்தில் மிகவும் மரியாதையும் சிறப்பும் வழங்கப்பட்டது. கோவில் நடனமாடும் கலை...
48
அடிமைகள் சோழர்காலத்தில் அடிமை முறை வழக்கத்தில் இருந்தது. அடிமைகளாகவே சிலர் வாழ்ந்துள்ளனர். சிலர் வரிகட்ட முடியாமல் தங்களைத் தாங்களே விற்றுக் கொண்டனர். தலைமுறை தலைமுறையாகப் பணி செய்யவும் சிலர் விற்கப்பட்டனர். போரில் சிறைபிடிக்கப்பட ஆண்களும் பெண்களுமே பெரும்பாலும் பணியாளர்களாக அமர்த்தப்பட்டனர். போரிட்டு வென்ற வேற்று நாட்...
49
சோழரின் வணிகம் சோழர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகத்தில் சிறந்து விளங்கினர். சீனாவின் சோங் (Song) வம்சத்தின் குறிப்பொன்று, சோழ வணிகக் குழுவொன்று, பொ.ஊ. 1077 ஆம் ஆண்டில், சீன அரசவைக்குச் சென்றது பற்றிக் கூறுகின்றது. சுமத்ராத் தீவில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் சாசனப் பகுதியொன்று, சோழநாட்டு வணிகக் கணங்களில் ஒன்றாகிய நா...
50
சோழர்காலப் பண்பாட்டு அம்சங்கள் சோழர் காலத்தில் கலை, இலக்கியம், சமயம் முதலிய துறைகளில் பெரு வளர்ச்சி காணப்பட்டது. இத்துறைகள் எல்லாவற்றிலுமே பல்லவர் காலத்தில் தொடங்கப்பட்ட போக்குகளின் உச்ச நிலையாகச் சோழர் காலம் அமைந்தது எனலாம். சோழர் காலத்தைத் தமிழரின் செவ்வியல் காலம் (classical age) என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. எனினும...
51
கலைகள் சோழர்காலத்தில் கட்டிடக் கலை சிறப்புற்றிருந்தது. சோழர்களின் நகரம், உள்ளாலை, புறம்பாடி என்ற இரு பிரிவாக இருந்தது. நகரங்கள் மிகப்பெரியவை. பல மாடிவீடுகள் கொண்டவை. இன்ன இடத்தில் இன்ன வகையான வீடுகள் தான் கட்டலாம் என்றும், இன்னவர்கள் இத்தனை மாடிகளுடன்தான் வீடுகள் கட்ட வேண்டும் என்றும் விதிகள் இருந்தன. பல அங்காடிகள் இரு...
52
சோழர் காலம், கல்லாலும் வெண்கலத்தாலும் ஆக்கப்பட்டச் சிலைகளுக்குப் பெயர் பெற்றது. இக் காலத்துக்குரிய, சிவனின் பல்வேறு தோற்றங்கள், விட்டுணு, மற்றும் பல கடவுட் சிலைகள் தென்னிந்தியக் கோயில்களிலும், பலநாட்டு அரும்பொருட் காட்சியகங்களிலும் காணக் கிடைக்கிறது. இச்சிலைகள் பழங்காலச் சிற்பநூல்கள்களிலும், ஆகமங்களிலும் சொல்லப்பட்டுள்...
53
கல்வி சோழர் காலத்தில் கல்வி சமசுகிருத மொழியில் பிராமணர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. கோயில்களுடன் இணைந்திருந்த கல்விக்கூடங்களில் மிகவும் ஒழுங்கான முறையில் இந்தக் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. இப்படி கல்வி பயின்றவர்களே சோழ அரசின் நிர்வாகத்துறையிலும் கோயில்களிலும் உள்வாங்கப்பட்டார்கள். இன்று போல் பொதுமக்களுக்கான கல்வி என...
54
மொழி சோழர் காலத்தில் தமிழ் சிறப்புற்று இருந்தது. நிர்வாகம், வணிகம், இலக்கியம், சமயம் என்று பல தளங்களில் தமிழ் பயன்படுத்தப்பட்டது. சோழர்களின் கல்வெட்டுக்களும் பட்டயங்களும் பல தமிழிலேயே அமைந்துள்ளன. இருப்பினும் "அவற்றின் மெய்கீர்த்திகளில் சமற்கிருத ஆட்சியே மேலோங்கி நின்றது".
55
இலக்கியம் சோழர் காலம், தமிழ் இலக்கியத்திற்குச் சிறப்பானதொரு காலமாகும்.இக்காலத்தில் இலக்கிய வளர்ச்சி மிகுந்திருந்தது. ஆனால் சோழர்களால் தமிழ், உயர் கல்வி கூடங்களில் ஊக்குவிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சோழர் காலக் கல்வெட்டுக்களில் பல இலக்கியங்கள் குறிப்பிடப் பட்டுள்ளனவாயினும், அவற்றுட் பல தற்காலம் வரை நி...
56
சமயம் சோழர் இந்து சமயத்தை, சிறப்பாகச் சைவ சமயத்தைச் சார்ந்தவர்களாவர். எனினும் பிற மதங்களையும் ஆதரித்தனர். சைவம், வைணவம் என்ற இரு மதங்களும் சோழர் காலத்தில் சிறந்திருந்தது. ஏராளமான சைவ, வைணவ மடங்களும் கோவில்களும் அமைக்கப்பட்டன. அவற்றிற்கு சாற்று முறை செய்ய வரியில்லா நிலங்கள், பணியாளர்கள் எனப்பெரும் பொருள் செலவிடப்பட்டது....
57
சேரர் (Chera dynasty) எனப்படுவோர் பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரைச் சேர்ந்தவர்கள் ஆவர். சேரர்களின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக இருந்தனர் என்று உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒ...
58
எல்லைகள் சங்க காலச் சேரர்தம் எல்லைகள் கொங்கத்தின் எல்லைகளேயாகும். ஆனால் பிற்காலத்தில் உருவாகிய கொல்லம் கேரள வர்மாக்கள் சமசுகிருதத்திற்குக் கேரளாவில் முக்கியத்துவம் அளித்ததால், அங்கு தமிழ் அழிந்தது. ஆகையால் அப்பகுதிகள் தனியாட்சி பெற்றன. சங்க, பக்தி காலச் சேரர்கள் (சேரமான் பெருமாள், குலசேகரர் ஆகியோர்) கரூரினின்றே ஆட்சி ப...
59
இருப்பிடம் இந்த கேரளதேசத்தில் பூமி கிழக்கே உயரமாகவும், மேற்கே சரிந்தும் தென்வடலாய் நீண்டும், கடல் ஓரங்களில் சரிந்தும் மேடும், பள்ளமும், ஆகக் காணப்படும். வடகேரளம், தென்கேரளம் என இரு பிரிவாகவும், தென்கேரளத்திற்கு அனந்தபுரம் என்றும், வடகேரளத்திற்கு கொச்சி என்றும் பெயர் வழங்கிவருகிறது.
60
மன்னர்கள் சேர நாட்டை ஆண்ட அரச வம்சத்தினர் சேரர்கள் எனப்பட்டனர். சங்க நூல்கள் பலவற்றில் சேர மன்னர்கள் பற்றிய குறிப்புகள் வருகின்றன. மிகப் பழைய சங்க நூல்களில் ஒன்றாகிய பதிற்றுப்பத்து பத்து சேர மன்னர்களைப் பாடிய பாடற் தொகுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு சேர மன்னன் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன.
61
சங்ககாலச் சேரர்கள் சங்ககால நூல்கள் பலவற்றில் சேர வேந்தர்கள் பற்றிய குறிப்புகள் வருகின்றன. குறிப்பாக, சங்ககால நூல்களுள் ஒன்றான பதிற்றுப்பத்து, பத்து சேர வேந்தர்களைப் பற்றிப் பாடப்பட்ட பாடற் தொகுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு சேர வேந்தன் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன.
62
பிற்காலச் சேரர்கள் சேரமான் மாக்கோதையார் (பொ.ஊ. 598-629)
63
சேரமான் பெருமாள் நாயனார் (பொ.ஊ. 724-756) சேரமான் ஐயனாரிதனார் (பொ.ஊ. 756-800) குலசேகார வர்மன் (பொ.ஊ. 800-820) இராசசேகர வர்மன் (பொ.ஊ. 820-844) சாந்தனு ரவி வர்மன் (பொ.ஊ. 844-885) இராம வர்மா குலசேகர (பொ.ஊ. 885-917) கோதை ரவி வர்மா (பொ.ஊ. 917-944) இந்து கோதை வர்மா (பொ.ஊ. 944-962) பாசுகரா ரவி வர்மன் I (பொ.ஊ. 962-1019) பாசுகரா...
64
படைபலம் - பாவாணர்
65
நகரங்கள் கரூர் மற்றும் வஞ்சி என்று அழைக்கப்பட்ட நகரங்கள் சேர நாட்டின் தலை நகர்களாக விளங்கியன. முசிறி சேர நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும். இத் துறைமுகத்தின் நடவடிக்கைகள் பற்றியும், அதன் வளங்கள் பற்றியும் பண்டைத் தமிழ் நூல்களிலே குறிப்புகள் உள்ளன. சேர நாட்டின் இன்னொரு புகழ் பெற்ற துறைமுகம் தொண்டியாகும். தென்மேற...
66
8 நாடு (மகா சாமந்தம்) பிரிவுகள் சேர மன்னர்களில் சேரமான் பெருமாள்கள் திருவஞ்சைக் களத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட காலத்தில் சேர நாட்டை 8 (சாமந்தம் = கப்பம் செலுத்தும் நாடு) பிரிவுகளாக பிரித்து 8 மகா சாமந்த மன்னர்கள் ஆண்டுவந்தனர். அவர்கள் மகா சாமந்தர்கள் என அறியப்பட்டனர். அவை:
67
12 (சுதந்திர நாடு) பிரிவுகள் சேர மன்னர்களில் இறுதி மன்னன் மாகோதையார் என்ற சேரமான் பெருமாள் திருவஞ்சைக் களத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட காலத்தில் சேர நாட்டை 12 (சுவரூபம் + விடுதலை நாடுகள்) பிரிவுகளாக பிரித்து 12 மன்னர்களிடம் (குருநில மன்னர்கள்) பிரித்து வழங்கப்பட்டது. அவை:
68
மலை, காடு, விலங்குகள் இந்த தேசத்தில் நிறைய மலைகள் உண்டு, இவற்றில் பொதியம் மலையே மிகவும் உயரமானது. சிறு, சிறு குன்றுகளும், இத்தேசத்தின் நடுவிலுள்ள பூமியில் சிறு, சிறு காடுகளும் செழிப்பான நல்ல பூமி அதிகமாகவும் இருக்கும். இந்த தேசத்தின் கிழக்கில் மலையம், தர்துரம், என்னும் பெரிய மலைகளும், வருசகிரி, வராககிரி, போன்ற சிறு மலை...
69
நதிகள் இந்த பாண்டியதேசத்தில் பொதியம் மலையில் உற்பத்தியாகும் முரளா, கேரளதேசத்தை செழிக்க வைக்கின்றது.
70
வேளாண்மை இந்த கேரளதேசத்தில் நெல், வாழை, கரும்பு, ஏலம், கிராம்பு, போன்ற பயிர்களும், பயறு வகைகளும் விளைகின்றன.
71
பாண்டியர்கள் என்பவர்கள் பழந்தமிழ் நாட்டை ஆண்ட வேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இரு குலத்து வேந்தர்கள் சேரர்களும் சோழர்களும் ஆவர். பாண்டியர்கள் தற்போதைய தமிழ்நாடு மாநிலத்தின் தென்பகுதிகளையும் கேரள மாநிலத்தின் தென்பகுதிகளையும் ஆட்சி செய்தனர். இந்தியாவில் எந்த ஒரு மன்னர் குலத்துக்கும் இல்லாத நெடிய வரலாறு பாண்டியர்களுக்...
72
சொல்லிலக்கணம் பண்டு = பண்டைய = பாண்டிய = பாண்டியர் என்று திரிந்திருக்கலாம் என்பது பாவாணர் கூற்று.பாண்டியர் என்னும் சொல் பண்டையர் என்னும் சொற்றிரிபே என்றும் மொழி நூல் வல்லுநரும் மொழிவர். பண்டைய நாடு' என்பதே பாண்டிய நாடு' என மருவியதாக கூறுவர்.
73
இடம் பாண்டியநாடு சோழ நாட்டிற்கு தெற்கிலும், சேர நாட்டிற்கு கிழக்கிலும் இருந்த நாடாகும். இந்த பாண்டிய தேசத்தில் பூமி மேற்கே உயரமாகவும், கிழக்கே சரிந்தும் தென்வடலாய் நீண்டும் கடல் ஓரங்களில் சரிந்தும் மேடும், பள்ளமும், ஆகக் காணப்படும். இந்த தேசத்தில் நிறைய மலைகள் உண்டு, இவற்றில் பொதியம் மலையே மிகவும் உயரமானது. சிறு, சிற...
74
வெள்ளாறு அதுவடக்கா மேற்குப் பெருவழியாம் தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் - உள்ளார ஆண்ட கடல்கிழக்காம் ஐம்பத் தறுகாதம் பாண்டிநாட் டெல்லைப் பதி --பெருந்தொகை
75
இந்தப் பாடலை 12ஆம் நூற்றாண்டில் சோழநாட்டை ஆண்ட மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் அவைக்களப் புலவராய் இருந்த கம்பர் பாடியது என்று பாவாணர் சொல்லுகிறார். இப்பாடல் படி, வடக்கில் வெள்ளாறும் மேற்கில் பெருவழியும் தெற்கில் கன்னியாகுமரியும் கிழக்கில் வங்காள விரிகுடா கடலும் எல்லைகளாக இருந்துள்ளன.
76
பாண்டியர் பெயர்கள் பாண்டியர் தங்கள் பெயரில் மாறன், வழுதி, சடையவர்மன், மாறவர்மன், வர்மன், செழியன், முது குடுமி என்ற ஒட்டுக்களைக் சேர்த்துக் கொண்டனர். இவர்களின் குலப்பெயர் பரவலாகப் பாண்டியர் என அறியப்படினும் இவர்கள் சந்திர குலம், தென்னர் குலம், கவுரியர் குலம், பஞ்சவர் குலம் என்றும் பாடல்களில் போற்றப்படுகின்றனர்.
77
தொன்மங்களில் பாண்டியர்கள் குமரிக் கண்டத்தில் தோன்றிய மனித சந்ததியினரே பாண்டியராக உருப்பெற்றிருக்கலாம் என்பது பொதுவாக நிலவும் கருத்து. இந்தியப்பெருங்கடலில் மூழ்கிவிட்டதெனக் கருதப்படும் குமரிக்கண்டத்தில் 72 நாடுகளும் தலைநகராக தென்மதுரையும் விளங்கியது. பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கிய இத்தென்மதுரை கடற்கோளினால் அழிவுற...
78
இராமாயணத்தில் பாண்டிய மன்னர்களின் இடைச்சங்க தலைநகரான கபாடபுரம் பொன்முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது என்றும் முத்து, பொன் அலங்கரித்த கோட்டை வாயில் இருந்தது என்றும் இராமாயணத்தில் உள்ளது.
79
புராணங்களில் பல இந்து மதப் புராணங்களும், தமிழ் இலக்கியக்களும் நாட்டுப்புறக் கதைகளும் பல பாண்டிய மன்னர்கள் இருந்ததாகவும் அவர்கள் வரிசையாகப் பதவியேற்றதாகவும் குறிப்பிடுகின்றன. இது தவிர்த்து திருவிளையாடல் புராணங்களில் எழுபதுக்கும் மேற்பட்ட பாண்டிய மன்னர்களும், நற்குடி வேளாளர் வரலாற்றில் 201 பாண்டிய மன்னர்களும், இறையனார் அ...
80
வரலாற்றுச் சான்றுகள் பிற நாட்டவர் பதிவுகள் சுமார் பொ.ஊ.மு. 300 - மெகசிதெனசு இந்தியா வருகை. பண்டையா என்னும் அரசு பாண்டியர் நாட்டை ஆண்டதாக குறிப்பு. மேலும் அவனது நாட்டுக் குறிப்பில் பாண்டிய நாடு பற்றி தகவல்கள் பல உள்ளன. எரெக்ளீசு (Heracles) என்ற மன்னனுக்கு 'பண்டேயா' என்ற பெண் பிறந்தாள்.அவளுக்கு கடல்சார்ந்த தென்னாட்டைக் க...
81
அசோகனின் கல்வெட்டுக்களில் மகத நாட்டு அரசர்கள் மௌரியர்கள். மௌரிய அரசன் பேரரசர் அசோகர் கல்வெட்டுக்களில் பாண்டிய நாடு பாண்டியர் பற்றிய செய்திகள் உள்ளன.
82
மகாவம்சத்தில் இலங்கையை ஆண்ட விசயன் தனியாட்சி புரிந்தவன் இவன் பாண்டிய மன்னன் ஒருவனின் மகளை மணந்தான். அப்பாண்டிய மன்னனுக்கு ஆண்டுதோறும் பல பரிசுகளை அனுப்பினான் என்று மகாவம்சம் கூறுகின்றது.
83
சங்க காலப் பதிவுகள் பாண்டியர்கள் சந்திர குலத்தைச் சார்ந்தவர்கள் எனவும். வேப்பம் பூ மாலை அணிந்தவர்கள் எனவும் மீன்கொடியினை உடையவர்கள் எனவும் சங்க கால நூற்குறிப்புகள், கல்வெட்டுக்கள், சாசனங்கள் மற்றும் மெய்க்கீர்த்திகளும் வரலாற்று மூலங்களாக உள்ளன.
84
பாண்டிய நாட்டில் பிற நாட்டவர் ஆட்சி களப்பிரர் ஆட்சி வடநாட்டில் பல்லவர்களால் அடித்துவிரட்டப்பட்ட களப்பிரர் பொ.ஊ. 300-600 கன்னட நாடு வழியாக கொங்கு நாட்டிலும், சேர, சோழ, பாண்டி நாட்டிலும் புகுந்து பாண்டியர்களை அடக்கி ஆண்டனர். களப்பிரர்களைத் தொடர்ந்து வந்த பல்லவர் ஆட்சிக்காலமான பொ.ஊ. 350 – 550 வரையிலும் பாண்டியப் பேரரசு பெ...
85
சோழராட்சி பாண்டிய நாட்டின் பெரும்பகுதிகள் பொ.ஊ. 1020 முதல் 1070 வரை சோழ மன்னர்களின் ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இராசராசன் மகனான இராசேந்திர சோழனின் மூன்று மகன்களான சுந்தரசோழ பாண்டியன், விக்கிரமசோழ பாண்டியன், பராக்கிரம பாண்டியன் மூவரும் சோழ பாண்டியர் எனப் பட்டம்பெற்று பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த சோழ மன்னர்களாவ...
86
சுல்தானியர் ஆட்சி கில்சி பேரரசின் மன்னன் மாலிக்காபூரிடம் பாண்டிய மன்னனான சுந்தரபாண்டியனால் தன் தம்பியான இரண்டாம் வீரபாண்டியனை வெல்ல உதவியினை நாடினான். இரண்டாம் வீரபாண்டியனை வெற்றி கொண்ட மாலிக்காபூர் சுந்தரபாண்டியனை அடிமைப்படுத்தினான் என்பதும் குறிப்பிடத்தக்கது. சயாவுடீன் பார்னி , அமீர்குசுரு, வாசப் போன்றவர்களின் கூற்று...
87
இம்மன்னர்களது கல்வெட்டுகள் பாண்டிய நாடெங்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது மேலும் போசள மன்னனான மூன்றாம் வீரவல்லாள தேவனும் போர்க்களத்தில் இறந்தான் இச்செய்தியை விசயநகர அரசனொருவன் அறிந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
88
ராயர்களின் ஆட்சி பாண்டியர் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த சமயம் வாணாதிராயர்கள் பலர் இருந்தனர். புதுக்கோட்டை கோனாடு இருந்த பொழுது பிள்ளை குலசேகர வாணாதிராயன் ஒருவன் பாண்டிய நாட்டில் ஆட்சி செய்தான். இராமநாதபுரத்தில் கேரள சிங்கவள நாடு இருந்தது அங்கு வாணாதிராயன் என்பவன் ஆட்சி செய்தான். இவர்களின் பின்னர் பாண்டியர் ஆட்சி வீழ்ச...
89
விசய நகரப் பேரரசாட்சி பொ.ஊ. 1310 முதல் 1748 ஆம் ஆண்டு வரை தமிழகத்தினை விசயநகரப் பேரரசு ஆண்டது. நாயக்க மன்னர்கள் அரசியல் அதிகாரிகளாக ஆட்சி புரிந்துள்ளனர். இவர்கள் ஆட்சிக் காலங்களில் தமிழகத்தில் கோயில்கள், மண்டபங்கள், சிற்பக் கூடங்கள், உலகப் புகழ்பெற்ற சிற்பங்கள் போன்றனவை சிறப்பம்சமாக விளங்கின.சேர, சோழ, பாண்டியர் போன்ற ப...
90
பொ.ஊ. 1387 ஆம் ஆண்டளவில் பராக்கிரம பாண்டியன் திருக்குற்றாலத்தில் திருப்பணி புரிந்தான். பொ.ஊ. 1384–1415 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்தான் பராக்கிரம பாண்டியன் என்ற பெயருடைய ஒன்னொருவன். பொ.ஊ. 1401–1434 வரை பராக்கிரம பாண்டியன் ஒருவன் பாண்டிய நாட்டில் ஆட்சி செய்தான். சடையவர்மன் குலசேகர பாண்டியன் என்ற பெயர்கொண்ட ஒருவன் ப...
91
பாண்டிய நாட்டுக் குறுநில மன்னர்கள் மானாபரணன், வீரகேரள பாண்டியன், சுந்தர பாண்டியன், விக்கிரம பாண்டியன், வீரபாண்டியன் ஆகிய ஐந்து மன்னர்களும் பாண்டிய நாட்டில் சோழராட்சி இருந்த சமயம் சோழ மன்னன் இராசாதிராசனால் அடக்கி வைக்கப்பட்டனர். மானாபரணன் மற்றும் வீரகேரளன் ஆகியோர் இராசராசனிடம் போரிட்டுத் தோற்று இறந்தனர். சுந்தர பாண்டியன...
92
பாண்டியர் ஆட்சி இயல் நாட்டியல் தமிழகத்தின் தென்பகுதியில் பாண்டிய நாடு அமைந்திருந்தது. மேற்கே சேர நாடும், மலை நாடும்; கிழக்கே கடல், வடக்கே சோழ நாடும், கொங்கு நாடும்; தெற்கே கடலும் குமரிமுனை இதன் எல்லையாகவும் இருந்தன. இன்றைய மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை வெள்ளாற்றுக்குத் தெற்குப் பகுதியில்...
93
என்ற புறப் பாடல்கள் ஊரும், நாடும் எனக் கூறும். இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் என்ற தொடர்மொழி அமைப்புச் சான்றாக விளங்குகின்றது. ஊர்கள், கூற்றங்கள், வளநாடுகள், மண்டலம் என்ற அமைப்பில் பிரிக்கப்பட்டிருந்தது. பாண்டியர் காலத்து நாடுகளும் கூற்றங்களும் ஊர்கள் கூற்றம், நாடுகளில் அமைந்தன.
94
பாண்டியநாடு பிரிவுகள் அளநாடு தேனி சின்னமனூர் கம்பம் வட்டாரம் பொங்கலூர்கா நாடு, வைகாவூர் நாடு பழனி வட்டம், அண்டநாடு ஒட்டன்சத்திரம் வட்டம், ஆற்றூர்நாடு, அதம்ப நாடு திண்டுக்கல் வட்டம், வடகல்லகநாடு, தென்கல்லகநாடு, பாகனூர்கூற்றம் ஆகியவை நிலக்கோட்டை வட்டம் பூம்பாறை நாடு கொடைக்கானல் வட்டம், நெடுங்களநாடு வத்தலக்குண்டு வட்டம், ...
95
(நாடும் கூற்றமும் அடங்கியது வளநாடு) பாண்டியர்களின் இயற்பெயரும், சிறப்புப் பெயரும் வளநாடு பெயராக அமைந்தன.
96
குடும்பவியல் அரசன், அரசி, இளவரசன், பட்டத்தரசி என்ற முறையில் குடும்பம் அமைந்தது. பாண்டிய அரசன், வேந்தன் எனப்பட்டான். பட்டத்தரசி, பாண்டிமாதேவி எனப்பட்டாள். சில பாண்டிய அரசர்கள், பட்டத்தரசியை அன்றி பிற பெண்களையும் மணந்திருந்தனர். புராணங்களின் படி பெண்களும் முடிசூடி ஆட்சி நடத்தியதோடு போரும் செய்திருக்கின்றனர். அரசனின் மூத்...
97
அரசியல் ஆட்சி இயல் பாண்டியரின் ஆட்சிக்கு உற்ற துணையாக இருந்தவர்கள் அமைச்சர்கள். அடுத்த நிலையில் அரசியல் அதிகாரிகள், படைத் தலைவர்கள் இருந்தனர். அரையர், நாடுவகை செய்வோர். வரியிலார், புரவுவரித் திணைக்களத்தார், திருமுகம் எழுதுவோர் ஆகியவர்களும் அரசனுக்கு ஆட்சியில் துணை செய்தவர்கள் ஆவார்கள். 1-அரையர் உள்நாட்டுப் பணி புரியும்...
98
காவிரி, ஏனாதி பட்டம் பெற்றவர்களுக்கு பொற்பூ, மோதிரம், இறையிலி நிலம் அளித்துக் கௌரவிப்பது பாண்டியர்களின் வழக்கமாகும்.
99
End of preview. Expand in Data Studio
README.md exists but content is empty.
Downloads last month
2